பெல்காம் பாவ் பஜ்ஜி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 11294
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி சிறு துண்டுகள் இருக்கும்படி மசித்துக் கொள்ளவும்.
  • தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
  • 2 பெரிய வெங்காயத்தை தனியாகவும், 1 பெரிய வெங்காயத்தை தனியாகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு, லேஸாக காய்ந்ததும் நறுக்கிய 2 வெங்காயத்தைப் போட்டு லேஸாக சிவந்ததும், இஞ்சி — பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி அரைத்தது போட்டு வதக்கி, எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், பாவ் பாஜி மஸாலா பவுடர், உப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் இவற்றைப் போட்டு, கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பாவ் பன்னை நீளவசமாக கீறல் போட்டு, மஸாலாவுடன் பரிமாறவும்.
Engineered By ZITIMA