சுறா மீன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4842
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், 2 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி சோம்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து, கரைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மீதமுள்ள சீரகம், சோம்பு, மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
  • நன்றாக வதக்கியபின் புளிக்கரைசல் கலவையை சேர்த்துக் கிளறவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளைப் போட்டு கவனமாக, மெதுவாக கிளறவும்.
  • மீன் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA