சுறா மீன்—வெண்டைக்காய் கறி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3083
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள், மஞ்சள்தூள், இவற்றைக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியை காய வைத்து சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகாய், இவற்றை வறுத்து கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெண்டைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் மூன்று மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து (Shallow Fry) எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் தூளாக்கிய பொருட்களைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு, கரம்மஸாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  • அனைத்தும் கலந்து நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து, கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA