கருவாட்டு குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 4686
Likes :

Preparation Method

  • கருவாடை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • சீரகம், சின்ன வெங்காயம், சிகப்பு மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
  • மஸாலா வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு போட்டுக் கிளறி விடவும்.
  • குழம்பு கெட்டியானதும் கருவாட்டு துண்டுகளைப் போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA