Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 8504 Likes :
Ingredients
மீன் துண்டுகள் 8 தேங்காய்த்துறுவல் 2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 3 தனியாத்தூள் 1 தேக்கரண்டி சீரகத்தூள் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி பூண்டு 6 பல் கடுகு 1 தேக்கரண்டி வெந்தயம் அரை தேக்கரண்டி கறிவேப்பிலை 1 ஆர்க்கு தக்காளி 1 பெரிய வெங்காயம் 1 புளி 1 எலுமிச்சை அளவு உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய்த்துறுவல், தனியாத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்து வைத்துக் கொள்ளவும்.
மீன் குழம்பு சட்டியில் (மண் சட்டியில் தயாரித்தால் சுவை கூடும்) இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகயை, தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்.
வதக்கியபின் அரைத்த மஸாலா போட்டு 5 நிமிடங்கள் வதக்கியதும், புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
குழம்பு ஓரளவு கெட்டியானதும் மீன் துண்டுகள் போட்டு, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.