ஃபிஷ் கட்லெட்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8687
Likes :

Preparation Method

  • மீனை வேக வைத்து முள் நீக்கி உதிர்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • முட்டையை உப்புத்தூள் சேர்த்து, அடித்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, உப்புத்தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி இலை போட்டு வதக்கி, இறக்கி, அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • மீன் உதிர்த்தது, உருளைக்கிழங்கு, அரைத்த மஸாலா, எலுமிச்சைச்சாறு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • கலந்தபின் கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட் வடிவமாக செய்துள்ள மீனை முட்டையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி எண்ணெயில் போட்டு (Deep Fry) பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA