ரஸமலாய்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 5345
Likes :

Preparation Method

  • பாலை பாத்திரத்தில் ஊற்றி, கொதித்ததும் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கவும்.
  • எலுமிச்சைச்சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, பால் நன்றாக திரிந்ததும் எலுமிச்சைச்சாறு ஊற்றுவதை நிறுத்தவும்.
  • திரிந்த பாலை துணியில் வடிக்கட்டவும்.
  • வடிகட்டிய பாலில் (துணியில் நிற்கும்) சிறிதளவு தண்ணீர் தெளித்து, கிளறி மறுபடியும் துளி கூட தண்ணீர் இன்றி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • 750 மில்லி லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து ஓரளவு வற்ற வைத்து, ½ கப் சர்க்கரையை போட்டுக் கிளறி இறக்கி தனியே வைக்கவும்.
  • வடிகட்டி வைத்துள்ள திரிந்த பாலை பூரிப்பலகை மீது வைத்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • இதில் அதன்பின் ரஸமலாய் வடிவத்திற்கு செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீரில் 1½ கப் சர்க்கரை சேர்த்து கொதித்ததும் இறக்கி கொள்ளவும்.
  • சர்க்கரை கரைந்தால் போதும்.
  • ரஸமலாய் வடிவத்திற்கு செய்து வைத்துள்ளவற்றை சர்க்கரை கலந்த தண்ணீரில் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.
  • 5 நிமிடங்கள் ஆனதும் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து விடவும்.
  • தண்ணீர் தெளித்தால் பாகு முறுகிவிடாமல் இருக்கும்.
  • பாகு ஆகிவிடாமல் கவனமாக அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
  • 20 நிமிடங்கள் ஆனபின் ரஸமலாய்களை வற்ற வைத்துள்ள பாலில் போட்டு, முந்திரிப்பருப்பு, பிஸ்தாபருப்பு, ஏலக்காய்தூள் தூவி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA