லட்டு

Spread The Taste
Makes
12 லட்டுகள்
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 45 நிமிடங்கள்
Hits   : 5914
Likes :

Preparation Method

  • கடலை மாவு, அரிசி மாவு இவற்றுடன் தண்ணீர் கலந்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், கிராம்பு போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • 250 மில்லி லிட்டர் தண்ணீரில், சர்க்கரை போட்டு கொதிக்க வைத்து, கம்பிப் பதமாகக் காய்ச்சி இதில் கேசரி கலர் பொடி, குங்குமப்பூ போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் கண் கரண்டியை (பூந்தி தேய்ப்பது) காய வைத்திருக்கும் நெய்யின் மீது பிடித்து, இன்னொரு கரண்டியில் மாவை ஊற்றி, வேகமாகத் தேய்க்கவும்.
  • தேய்த்ததும் கிளறி விடவும்.
  • வெந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு லேஸாக அழுத்தி சிறிது நேரம் கழித்து, எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
  • இத்துடன் வறுத்து, வைத்துள்ள முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், கிராம்பு இவற்றைப் போட்டு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின் பக்கம் கொண்டு, நசுக்கி, உருண்டைகளாக செய்து வைத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA