Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 1 மணிநேரம்
Hits : 5831 Likes :
Ingredients
கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
நெய் 2 தேக்கரண்டி
மஞ்சள் கலர் பொடி அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
வறுகடலை 2 மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
கடலைமாவு, அரிசிமாவு, உப்புத்தூள், மஞ்சள் கலர்பொடி, பெருங்காயத்தூள் இவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கரண்டியில் சிறிதளவு மாவை எடுத்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யின் மேல் பக்கமாக பிடித்து இன்னொரு கரண்டியால் மாவை தேய்த்து விடவும்.
அதன்பின் கிளறி விட்டு, வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
இது போல் எல்லா மாவிலும் காரா பூந்தி தயார் செய்து கொள்ளவும்.
வேறு வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வறுகடலையை மறுபடியும் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அதன்பின் முந்திரிப்பருப்பை வறுத்து எடுக்கவும்.
கறிவேப்பிலையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தயாரித்த காராபூந்தியுடன் மிளகாய்த்தூள், வறுகடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை இவற்றைக் கலந்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவையான போது பரிமாறவும்.