தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8367
Likes :

Preparation Method

  • கறியை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • கறி வேக வைத்த தண்ணீரை எடுத்து தனியே வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • தேங்காயைத்துறுவி 2 மேஜைக்கரண்டி தேங்காய்த்துறுவலை கசகசாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள தேங்காய் துறுவலில் 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், புதினா இலை, கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள கறித்துண்டுகளைப் போட்டு, கசகசா அரைத்தது, தயிர் சேர்த்துக் கிளறவும்.
  • 5 நிமிடங்கள் ஆனதும் கறிவேக வைத்த தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து 4 கப் இருக்கும்படி ஊற்றவும்.  கறிவேக வைத்த தண்ணீர் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • உப்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி விடவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டு கிளறி விட்டு, மூடி வைத்து தீயை மிதமாக்கவும்.
  • அரிசி வெந்ததும், திறந்து நெய் ஊற்றி, நன்றாக கிளறி இறக்கி மூடி வைக்கவும்.
  • தேவையான போது பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA