உருளைக்கிழங்கு மஸாலா தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 5651
Likes :

Preparation Method

  • தோசை மாவு    தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, சிறு துண்டுகளாக இருக்கும்படி லேஸாக பிசைந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு போட்டு, தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தண்ணீர், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு போட்டு, கிளறவும். கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, தோசை மாவு சிறிதளவு கரண்டியில் எடுத்து, நடுவிலிருந்து விளிம்பு வரை முறுகலாக வரும்படி பரவலாக ஊற்றவும். சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து தோசை முழுவதும் பரப்பி விடவும்.
  • தோசை முறுகலாக, சிவந்ததும் அரை வட்டமாக மடித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA