பிட்ஸா தோசை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 4335
Likes :

Preparation Method

  • தோசைமாவு    தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • குடமிளகாயின் விதைகள் நீக்கியபின் சற்று பெரிய முக்கோண வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பேபி கார்னை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறித்துண்டுகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பிட்ஸா தோசைக்கு ஸாஸ் தயாரிப்பதற்கு:
  • தக்காளி, வெங்காயம், மிளகாய் இவற்றை அரைத்து, சிறிதளவு வெண்ணெய்யில் வதக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து, கிளறி தனியே வைத்துக் கொள்ளவும்.
  • பிட்ஸா தோசைக்கு மேலே வைப்பதற்கு:
  • வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் வெங்காயம் போட்டு லேஸாக வதக்கவும் (அதிகமாக வதக்கக்கூடாது).
  • அதன்பின் பேபிகார்ன், கேரட், குடமிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு உப்புத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்த கோழிக்கறிதுண்டுகளைப் போட்டுக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து சிறிதளவு வெண்ணெய் போட்டு, பருமனான தோசையாக ஊற்றவும்.
  • தயாரித்து வைத்துள்ள ஸாஸை சிறிதளவு தோசையின் மீது பரவலாக போடவும்.
  • இதன்மீது காய்கறி—கோழிக்கறி கலவையில் சிறிதளவு பரவலாக வைக்கவும்.
  • பேபி கார்ன், கோழிக்கறி, கேரட், குடமிளகாய் இவை அதிகம் வதங்காமல் இருப்பது அவசியம்.
  • காய்கறி—கோழிக்கறி கலவை போட்ட பிறகு, சீஸ் துறுவல் பரவலாக போட்டு மூடி வைக்கவும்.
  • அதன்பின் நொறுக்கிய மிளகாயை பரவலாக தூவவும்.
  • சுமார் 7 நிமிடங்கள் ஆன பிறகு மூடியைத் திறந்து எடுத்து பரிமாறவும்.
  • இது போல தேவையான அளவு பிஸ்ஸா தோசைகள் தயாரிக்கவும்.
Engineered By ZITIMA