வெங்காய ஊத்தப்பம்

Spread The Taste
Makes
25 ஊத்தப்பங்கள்
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 11947
Likes :

Preparation Method

  • புழுங்கல் அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்து, தனித்தனியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
  • மறுநாள் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லைக் காய வைத்து மாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து சற்று பருமனான ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • வெங்காயத்தில் சிறிதளவு எடுத்து ஊத்தப்பத்தின் மீது பரவலாக போடவும்.
  • ஊத்தப்பத்தை திருப்பிப் போட்டு 2 பக்கமும் நன்றாக வெந்ததும், வெங்காயம் சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • வெங்காயம் போடாமல் தயாரித்தால் ப்ளெய்ன் ஊத்தப்பமாகும்.
Engineered By ZITIMA