கறி தோசை

Spread The Taste
Makes
10 தோசைகள்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 10 நிமிடங்கள்
Hits   : 2801
Likes :

Preparation Method

  • கறியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள கறியைப் போட்டு 2 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகத்தூள் போட்டுக் கிளறவும்.
  • எல்லாம் கலந்து, நன்றாக வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து, கரண்டியில் மாவை எடுத்து சற்று பருமனான தோசையாக ஊற்றவும்.
  • வதக்கி வைத்துள்ள கறிக்கலவையில் இருந்து, சில கறித் துண்டுகளை மாவின் மீது பதித்து வைக்கவும்
  • தோசையை மெதுவாக திருப்பிப் போட்டு மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் கவனமாக எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA