Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits : 4974 Likes :
Ingredients
தோசை மாவு தேவையான அளவு
காளான் 500 கிராம்
பெரிய வெங்காயம் 2
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
தனியாத்தூள் 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு
Preparation Method
தோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
காளானுடன் 3 சிட்டிகை உப்புத்தூள், 2 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து வைத்து 2 நிமிடங்கள் ஆன பின் கழுவி, இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
வதங்கியதும் காளானைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டுக் கிளறவும்.
காளான் நன்றாக வதங்கியதும் கரம்மஸாலாத்தூள் போட்டு, கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, தோசைமாவில் சிறிதளவு எடுத்து, நடுவில் இருந்து, விளிம்பு வரை முறுகலாக வரும்படி பரவலாக ஊற்றவும். சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
காளான் மஸாலாவில் இருந்து சிறிதளவு எடுத்து, தோசை முழுவதும் வைத்து பரப்பி விடவும்.
தோசை முறுகலாக, சிவந்ததும் அரை வட்டமாக மடித்து எடுத்து பரிமாறவும்.