Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 1 தோசைக்கு 4 நிமிடங்கள்
Hits : 10355 Likes :
Ingredients
தோசை மாவு தேவையான அளவு
கொத்துக்கறி 750 கிராம்
பச்சை மிளகாய் 4
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்டவடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன்பின் கொத்துக்கறியைப் போட்டு சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
நன்றாக வதங்கி, கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, மாவை நடுவிலிருந்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, மறுபக்கம் வெந்ததும், மறுபடியும் திருப்பிப் போட்டு கொத்துக்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து தோசை முழுவதும் பரவலாகப் போடவும்.