அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக ஊற வைத்து, அவற்றில் அரிசியை சற்று கரகரப்பாகவும், உளுந்தை வழுவழுப்பாகவும் ஆட்டி, அதன்பின் ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
காலையில் தயிருடன் உப்பு கலந்து கொள்ளவும்.
பச்சை மிளகாயை அரைத்து, தயிருடன் கலந்து கொள்ளவும்.
சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் சேர்த்து, நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் சின்ன சின்ன தோசைகளாக ஊற்றவும். (ஒரு தடவைக்கு 4 அல்லது 5) ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு வெந்ததும் தோசைகளை தயிரில் போட்டு லேஸாக கிளறி விடவும்.
இதுபோல எல்லா மாவிலும் தோசைகள் செய்து தயிரில் போட்டு ஊற வைத்து, அதன்பின் பரிமாறவும்.
சின்ன தோசைகள் தயாரிப்பதற்கென்று பிரத்யேகமாக 5 அல்லது 6 குழிகள் உள்ள தோசைக்கல் விற்பனைக்கு உள்ளது.