கடலைப்பருப்பு தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 7293
Likes :

Preparation Method

  • அரிசியையும், கடலைப்பருப்பையும் ஒன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், குடமிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கிளறிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து ஊற்றி, தோசைக்கல்லின் விளிம்பு வரை மாவை பரப்பி விடவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
  • இது போல எல்லா மாவிலும் தோசை தயாரித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA