வெங்காய சட்னி

Spread The Taste
Makes
200 கிராம் சட்னி
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 8039
Likes :

Preparation Method

  • வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து, கடுகு, வெந்தயத்தை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்துக் கொள்ளவும்.
  • இஞ்சியின் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, மிளகாய், இஞ்சி இவற்றைப் போட்டு, வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
  • ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த கலவை, வெந்தயத்தூள், புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டுக் கொதிக்க வைத்து ஓரளவு கெட்டியானதும் நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA