Preparation Time: 25 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 11732 Likes :
Ingredients
கத்தரிக்காய் 500 கிராம்
பச்சை மிளகாய் 6
கடுகு அரை தேக்கரண்டி
இஞ்சி 1 அங்குலம்
புளி 1 கோலி அளவு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
கத்தரிக்காயை தணலில் வாட்டி, தோல் நீக்கிக் கொள்ளவும். வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, புளி, கத்தரிக்காய், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, இறக்கி வைக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, அரைத்த கத்தரிக்காய் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.