டோஃபு ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2733
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிய பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, 2 சிட்டிகை உப்புத்தூள் மற்றும் முட்டைகளை ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, முட்டை கலவையை ஊற்றி, கிளறி விடவும்.
  • முட்டை வெந்து தூள் ஆகும் வரை கிளறி (Scrumble) இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு 3 நிமிடங்கள் வதக்கி, கேரட், பட்டாணி போட்டு வதக்கவும்.
  • இவை வதங்கும் பொழுது ஸோயா ஸாஸ், ஹோய்ஸின் ஸாஸ், மீதமுள்ள 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் இவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் டோஃபு துண்டுகள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, உப்பு சரி பார்த்து, போட்டுக் கொள்ளவும்.
  • வெங்காயத்தாள் போட்டுக் கிளறி இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA