Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 6418 Likes :
Ingredients
கோழி கொத்துக்கறி 250 கிராம்
துறுவிய பீர்க்கங்காய் 1 கப்
சிகப்பு மிளகாய் அரைத்தது 1 தேக்கரண்டி
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
புதினா இலை 1 மேஜைக்கரண்டி
பொரிகடலைத்தூள் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
கொத்துக்கறியை சுத்தம் செய்து கொள்ளவும்.
பீர்க்கங்காய் துறுவல் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கொத்துக்கறியைப் போட்டு தண்ணீர் இன்றி வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
பீர்க்கங்காய் துறுவல், கொத்துக்கறி, பொரிகடலைத்தூள், புதினா இலை, இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்பு, சிகப்பு மிளகாய் அரைத்தது இவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
கலந்த பிறகு, உருண்டைகள் செய்து கொள்ளவும் (உருண்டை செய்வதற்கு தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு பொரிகடலைத்தூள் சேர்த்துக் கொள்ளவும்).
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.