மண்சட்டி பெப்பர் சிக்கன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7850
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து குழையாமல் அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • மண்சட்டியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் லேஸாக வதங்கியதும் பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், 1 ஆர்க்கு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, 1 மேஜைக்கரண்டி மிளகுத்தூள் இவற்றைப் போட்டு கிளறவும்.
  • கிளறியபின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் சிவக்க வதங்கியதும் மீதமுள்ள மிளகுத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்றாகக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA