Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 5891 Likes :
Ingredients
கோழிக்கறியின் மார்பு பகுதி (Breast) 100 கிராம்
பாஸ்மதி அரிசி 500 கிராம்
மூங்கில் குறுத்து 2
பெரிய வெங்காயம் 1
இஞ்சி 1 அங்குலம்
தக்காளி ஸாஸ் (Tomato Sauce) 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் 3
வினிகர் 2 மேஜைக்கரண்டி
டார்க் ஸோயா ஸாஸ் 3 தேக்கரண்டி
சோளமாவு (Corn Flour) 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
பாத்திரத்தில் அரிசியைப் போட்டு, இதன் மீது 3 அங்குல அளவு உயரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை இறுக, மூடி சூடேற்றவும்.
தண்ணீர் வற்றி, அரிசி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வைத்திருக்கவும்.
அதன்பின் மூடியை திறந்து, இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.
காலையில் தண்ணீர் முழுவதும் வற்றி, அரிசி மட்டும் சேர்ந்து இருக்கும்.
தயாரான அரிசியை ஒரு தட்டில் எடுத்து சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மூங்கில் குறுத்துகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தாளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய அரிசி துண்டங்களைப் போட்டு, பொரித்து எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சோள மாவை 1 கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன்பின் கோழிக்கறி துண்டுகள், மிளகுத்தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியபிறகு மூங்கில் குறுத்து மற்றும் வெங்காயத்தாள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
அதன்பின் வினிகர், சர்க்கரை, இஞ்சி அரைத்தது, ஸோயா ஸாஸ், தக்காளி ஸாஸ், கலந்து வைத்துள்ள சோளமாவுக் கரைசல், உப்பு இவற்றை சேர்த்து, கலவை கெட்டியானதும் 1 நிமிடம் கழித்து, பொரித்து வைத்துள்ள அரிசி துண்டங்களைப் போட்டுக் கிளறவும்.
1 நிமிடம் ஆனபின் அனைத்தையும் கலந்து, கிளறி பரிமாறவும்.