கோழிக்கறி சால்னா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 11555
Likes :

Preparation Method

  • கோழிக்கறி துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகளாகப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • தேங்காய் துறுவி பால் எடுத்து சால்னாவில் சேர்க்கவும்.
  • கோழிக்கறி வெந்து கெட்டியானதும் இறக்கி பரோட்டாவுடன் பரிமாறவும்.
  • பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு இவற்றின் மீது சூடான சால்னா ஊற்றி, நன்றாக ஊறியதும், சாப்பிட சுவையாக இருக்கும்.
  • கோழிக்கறிக்கு பதிலாக ஆட்டுக்கறியிலும் சால்னா தயாரிக்கலாம்.
Engineered By ZITIMA