கோழிக்கறி—உருளைக்கிழங்கு குருமா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7672
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை குழையாமல் வேகவைத்து, தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • தனியாத்தூள், சீரகத்தூள், மிளகு, பெரிய வெங்காயம், இஞ்சி இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் உற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • கோழிக்கறி துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கி, தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • குருமா ஓரளவு கெட்டியானதும் அரைத்த தேங்காய் போட்டு, கோழிக்கறி வெந்து, குருமா பதம் வந்ததும் இறக்கி, இட்லி, தோசை, பரோட்டா, பூரி, சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
Engineered By ZITIMA