வெங்காயம், இஞ்சி, பூண்டு, இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு வதக்கி, இறக்கி அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை தயிருடன் கலந்து கொள்ளவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, மிளகு இவற்றைப் போட்டு வதக்கி, தயிர்க்கலவையை சேர்த்து கிளறவும்.
அதன்பின் மஞ்சள்தூள், தனியாத்தூள், சர்க்கரை இவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியபின் ஊற வைத்துள்ள கோழிக்கறியைப் போட்டு வதக்கி, சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றவும்.
அனைத்தும் கலந்து நன்றாக வதங்கும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
இன்னொரு சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், போட்டு வதக்கி கரம் மஸாலாத்தூள் சேர்த்து சிவக்க வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வதங்கிக் கொண்டிருக்கும் கோழிக்கறியுடன் சின்ன வெங்காய கலவை, கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.