Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: சுமார் 30 to 40 நிமிடங்கள் அவன்—ஐ (Oven) 180° F—ல்
Hits : 7586 Likes :
Ingredients
மைதாமாவு 3 கப்
முட்டை 3
வெண்ணெய் 200 கிராம்
பால் 250 மில்லி லிட்டர்
பேக்கிங் பவுடர் (Baking Powder) ஒன்றரை தேக்கரண்டி
பாதாம் எஸென்ஸ் 1 தேக்கரண்டி
சர்க்கரை (Sugar) 2 கப்
எலுமிச்சைச்சாறு 10 சொட்டுகள்
உப்புத்தூள் 3 சிட்டிகை
Preparation Method
மைதாமாவுடன் பேக்கிங்பவுடர் கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையில் வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள் கரு தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
Electric Blender—னால் இரண்டையும் நன்றாக அடித்து வைக்கவும்.
சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, மஞ்சள் கருவை போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதன்பின் வெண்ணெய்யை போட்டு குழிக்கரண்டி அல்லது மத்தினால் நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
அதன்பின் மைதாமாவு கலவையை சேர்த்து நன்றாக கலந்து, வெனிலா எஸென்ஸ், உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கி, வெள்ளைக்கருவை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
கேக் பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் தடவியபின் இதன் மீது மைதா மாவை பரவலாக தூவி, கேக் பாத்திரத்தை சுழற்றவும்.
இதனால் மைதாமாவு பரவலாக பாத்திரத்தில் படும்.
அதன்பின் தயாரித்து வைத்துள்ள மாவை கேக் பாத்திரத்தில் முக்கால் பாகம் ஊற்றவும்.
கேக் பாத்திரத்தை தட்டி வைக்கவும்.
இதனால் கேக் மாவு சமமாக பரவி இருக்கும்.
ஏற்கெனவே சூடேற்றப்பட்ட அவன்—ல் கேக் பாத்திரத்தை வைத்து, சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் ஆனபின் கேக் வெந்தது பார்த்து (கத்தியினால் குத்தி பார்க்கவும்) எடுத்து, ஓரளவு ஆறியதம் துண்டுகளாக வெட்டி, பரிமாறவும்.