சிகப்பு மிளகாய் ஸாஸ் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 10403
Likes :

Preparation Method

  • முழுக்கோழியை நீள வசமாக நறுக்கி, ஒரு பகுதியை அப்படியே நீளத்துண்டாக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அகன்ற பாத்திரத்தில் (Broad Bowl) 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1 மேஜைக்கரண்டி தைம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டைப் போட்டுப் புரட்டி, 1 மணி நேரம் ஊற விடவும்.
  • வேறு ஒரு பாத்திரத்தில் சிகப்பு மிளகாய் ஸாஸ், தைம், மீதமுள்ள மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இதயம் நல்லெண்ணெய், 1 மேஜைக்கரண்டி வெண்ணெய் இவற்றைப் போட்டுக் கலந்து ஊற வைத்துளள கோழிக்கறி துண்டின் மீது தடவி மேலும் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அவன்ல் (Oven) பயன்படுத்தும் ட்ரேயில் வெண்ணெய் தடவி, கோழிக்கறித் துண்டை வைத்து ஏற்கெனவே சூடாக்கப்பட்டுள்ள (Pre Heated) அவன்ல் (Oven) 20 நிமிடத்தில் இருந்து 25 நிமிடங்கள் வரை வைத்து எடுத்து, பரிமாறலாம்.
             *Thyme என்பது ஒரு வகை உலர்ந்த பதப்படுத்தப்பட்ட சமையல் மூலிகை. Departmental Stores—ல் கிடைக்கிறது.

You Might Also Like

Choose Your Favorite Baked Recipes

  • சிகப்பு மிளகாய் ஸாஸ் சிக்கன்

    View Recipe
Engineered By ZITIMA