சிறுபருப்பு அல்வா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2882
Likes :

Preparation Method

  • சிறு பருப்பை முன்தின இரவில் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு, ½ கப் தண்ணீர் சேர்த்து, அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
  • பாலைக் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியில் நெய் ஊற்றி, லேஸாக காய்ந்ததும் அரைத்த சிறுபருப்பை சேர்த்துக் கிளறவும்.
  • கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறவும்.
  • பால், சர்க்கரை கலவையை சேர்த்துக் கிளறவும்.
  • நெய் பிரிந்து, அல்வா பதம் வந்ததும் வறுத்த வைத்துள்ள பாதாம்பருப்பு, பிஸ்தாபருப்பு, ஏலக்காய் பொடி, கிஸ்மிஸ் இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA