வடைகறி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி 30 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3201
Likes :

Preparation Method

  • கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக ஆட்டி, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஆட்டி வைத்துள்ள கடலைப்பருப்பில் சிறு உருண்டைகள் செய்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து தனியே வைக்கவும்.
  • பொரிகடலையை வறுத்துக் கொள்ளவும்.
  • 2 வெங்காயம், இஞ்சி, 4 பூண்டு, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, வறுத்த பொரிகடலை, இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சுடு தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • மீதமுள்ள வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 2 பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டை வதக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலாவைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் 3 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், சேர்க்கவும் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள வடைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் போதவில்லை என்றால் மேலும் சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றவும்.
  • உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.
  • ஓரளவு கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA