வாழைப்பூ 2 தேங்காய் 1 மூடி சோம்பு 1 தேக்கரண்டி இஞ்சி 1 அங்குலம் சிகப்பு மிளகாய் 10 பொரிகடலை 200 கிராம் மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 3 சிட்டிகை சின்ன வெங்காயம் 10 கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 ஆர்க்கு உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
வாழைப்பூவை உரித்து நடுவே உள்ள நரம்பை நீக்கிவிட்டு தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாழைப்பூவை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காயைத் துறுவிக் கொள்ளவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள வாழைப்பூவுடன் தேங்காய்த்துறுவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்பு, இஞ்சி, மிளகாய், பொரிகடலை, உப்பு இவற்றை சேர்த்து, ஆட்டிக் கொள்ளவும்.
ஆட்டிய கலவையில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு வடைகளாக தட்டி வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வடைகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.