பருப்பு போளி

Spread The Taste
Serves
30 போளிகள்
Preparation Time: 3 மணி 10 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 4399
Likes :

Preparation Method

  • மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, 4 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி இளக்கமாக பிசைந்து மாவை நன்றாக புரட்டி 3 மணி நேரம் ஊற விடவும்.
  • வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பை குழையாமல் வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு ஆறியபின் வெல்லத்தூளுடன் சேர்த்து, கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய கலவையுடன் 1 தேக்கரண்டி நெய், ஏலக்காய் பொடி, தேங்காய்த்துறுவலை போட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • அதன்பின் மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் சிறிதளவு எடுத்து, வாழை இலையில் இதயம் நல்லெண்ணெய் தடவி, அதில் வைத்து லேஸாக விரித்து, இதன் நடுவில் கடலைப்பருப்பு உருண்டையை வைத்து, மாவை இழுத்து உருண்டையை மூடி மெதுவாக, மறுபடியும் வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
  • இது போல எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லைக் காய வைத்து, சிறிதளவு நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள போளியை போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA