மலபார் மீன் குழம்பு

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7374
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை 4 பாகங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இவற்றை வதக்கி, இறக்கி ஆறியதும் வழு வழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயையும், சோம்பையும் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, அரைத்த கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் புளிக்கரைசலை ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்ததும் தக்காளி மற்றும் மீன் துண்டுகளைப் போடவும்.
  • மீன் துண்டுகள் வெந்து, குழம்பு ஓரளவு கெட்டியானதும் சோம்பு, தேங்காய்த்துறுவல் அரைத்ததை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
  • கொத்தமல்லி இலை போட்டு மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்திருந்து அதன்பின் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA