Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 5512 Likes :
Ingredients
அரிசி 200 கிராம்
துவரம்பருப்பு 200 கிராம்
மஞ்சள்தூள் 2 சிட்டிகை
பெரிய வெங்காயம் 1
கேரட் 1
உருளைக்கிழங்கு 1
முருங்கைக்காய் 1
பீன்ஸ் 6
சிகப்பு மிளகாய் 3 + 6
பச்சை மிளகாய் 2
புளி 1 சிறு எலுமிச்சை அளவு
சர்க்கரைஅல்லதுவெல்லத்தூள் 2 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை+ 1 சிட்டிகை
கத்தரிக்காய்(நீளமானது) 1
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மிளகு 4
பட்டை 2 துண்டு
கொப்பறை தேங்காய்துறுவல் 2 மேஜைக்கரண்டி
தனியா 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
நெய் 1 மேஜைக்கரண்டி
உப்புதேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 5 மேஜைக்கரண்டி
Preparation Method
துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை காய வைத்து, காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியா, சீரகம், கடுகு, வெந்தயம், மிளகு, மிளகாய், பட்டை இவற்றைப் போட்டு லைட் ப்ரவுன் கலராக வறுத்து, தேங்காய் துறுவல் சேர்த்து 1 நிமிடம் கிளறியபின் இறக்கி வைக்கவும்.
வறுத்து தனியே எடுத்து வைத்த கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை தூளாக்கிக் கொள்ளவும்.
அதன்பின் எண்ணெய் ஊற்றி வதக்கிய பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில், 6 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு மற்றும் அரிசி போட்டு குக்கரை மூடி வெயிட் போடவும்.
1 விசில் சப்தம் கேட்டதும் மிதமான தீயில் 4 நிமிடங்கள் வைத்திருந்த பின் இறக்கி வைக்கவும்.
வெயிட் தானாக எடுக்க வரும் வரை காத்திருக்கவும்.
வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிகப்பு மிளகாய் (கிள்ளியது), பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதக்கியபின் காய்கறிகளைப் போட்டு சுமார் 10 நிமிடங்கள் ஆனபின் காய்கறி வெந்துள்ளதா என பார்த்து மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து அரைத்த மஸாலாவை சேர்க்கவும்.
அதன்பின் தூளாக்கிய கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை சேர்த்து கிளறவும்.
அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் குக்கரைத் திறந்து காய்கறி கலவையைப் போட்டு கிளறி விடவும்.
உப்பு மற்றும் புளிக்கரைசலை ஊற்றி கிளறி விடவும்.
சர்க்கரை அல்லது வெல்லத்தூள், நெய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி, இறக்கியபின் பிஸி பேளா பாத்—உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து பரிமாறவும்.