மங்களூர் சிக்கன் சுக்கா

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3793
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெரிய வெங்காயம், தனியா, சீரகம், 1 தேக்கரண்டி கடுகு, மிளகு, வெந்தயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வறுத்து, ஆறியதும் 15 மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மஸாலா, புளித் தண்ணீர் இவற்றுடன் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • தேங்காய்த்துறுவல், பூண்டு, சீரகம் இவற்றை அதிக தண்ணீர் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு தாளித்து காய்ந்ததும் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • அவ்வப்போது திறந்து கிளறி, 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருக்கவும்.
  • அதன்பின் தேங்காய் அரைத்த கலவை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA