சிக்கன் ஹரியாலி கெபாப்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 50 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4842
Likes :

Preparation Method

  • உப்பு, வெண்ணெய், எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாலக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெந்தயக் கீரையை சிறிதளவு தண்ணீரில் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள வெந்தயக் கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்துள்ள கோழிக்கறியுடன் கரம்மஸாலாத்தூள், தயிர், மிளகாய்த்தூள், அரைத்து வைத்துள்ள பொருட்கள் இவற்றைப் போட்டுக் கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • மர skewers—ஐ தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊற வைத்தபின் Skewers—ல் சிறிதளவு எண்ணெய் தடவி, கோழித் துண்டுகளை வைத்துக் கொள்ளவும்.
  • கோழித்துண்டுகள் மீது மேலும் சிறிதளவு எண்ணெய் தடவவும்.
  • அவன்—ஐ (oven) 3500F ல் சூடேற்றிக் கொள்ளவும். நன்றாக சூடேறியபின் கோழிக்கறி வைத்துள்ள Skewers—ஐ அவன்—ல் (oven) வைக்கவும்.
  • 15 நிமிடங்கள் முதல் 18 நிமிடங்கள் வரை வேக விடவும்.
  • அவ்வப்போது skewers—ஐ திருப்பி விடவும்.
  • கோழிக்கறி நன்றாக வேகும்வரை வேக விடவும்.
  • அதன்பின் எடுத்து, பரிமாறும் தட்டில் வைத்து பரிமாறவும்.

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA