Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 7013 Likes :
Ingredients
மைதாமாவு 2 கப்
சமையல் ஸோடா 2 சிட்டிகை
கொத்துக்கறி 300 கிராம்
சீரகம் 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 1
இஞ்சி—பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள்அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
வெண்ணெய் 3 தேக்கரண்டி
உப்புதேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
மைதா மாவுடன் உப்பு, 1 தேக்கரண்டி நெய், வெண்ணெய், சமையல் சோடா சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.
கொத்துக்கறி மஸாலா தயாரிப்பதற்கு:
கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, அதன்பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கியபின் கொத்துக்கறி போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
கொத்துக்கறி வதங்கியபின் மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், தயிர், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
நன்றாக வதங்கியபின் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
மைதா மாவில் சிறிய உருண்டை செய்து, பூரிப்பலகை மீது வைத்து தேய்த்து நடுவில் சிறிதளவு கொத்துக்கறிக் கலவை வைத்து நீளமாக உருட்டி, ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.
இது போல் எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ளவற்றை பொரித்து எடுத்து பரிமாறவும்.