ஆந்திரா கோழி வெள்ளை புலவு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8950
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்து தனியே வைக்கவும்.
  • முட்டையை வேக வைத்து 2 துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகளுடன் பால், தூளாக்கிய பொருட்கள், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு அரைத்தது, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • பால் பாதி அளவு வற்றி, கோழிக்கறி வெந்ததும் வெண்ணெய்யை உருக்கி சேர்க்கவும்.
  • 3 நிமிடங்கள் ஆனபின் இறக்கிக் கொள்ளவும்.
  • வேறு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • அவன்ல் வைக்கக்கூடிய அடி கனமான பாத்திரத்தில் 1 பகுதி சாதம், இதன் மீது பாலில் வெந்துள்ள கோழிக்கறி (பாலேடு) போட்டு, மறுபடியும் மற்றொரு பகுதி சாதம் போட்டு இதன் மீது மீதமுள்ள பாலில் வெந்துள்ள கோழிக்கறி (பாலேடு) சேர்க்கவும்.
  • எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும்.
  • பாத்திரத்ததை மூடவும்.
  • ஏற்கெனவே சூடேற்றப்பட்ட அவன்ல் 275°F/140°C யில் சுமார் 30 நிமிடங்கள் வைத்திருந்து சாதம் முழுமையாக வெந்தபின் வெளியே எடுக்கவும்.
  • பரிமாறும் போது கோழி புலவின் மீது பட்டாணி, முட்டை வைத்து அலங்கரித்து வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA