Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 5142 Likes :
Ingredients
மாங்காய் 2
அரிசி 500 கிராம்
சிகப்புமிளகாய் 4
இஞ்சி 1 அங்குலம்
பெருங்காயத்தூள்அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 6
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
வறுகடலை 5 மேஜைக்கரண்டி
வறுத்தமுந்திரிப்பருப்பு 10
நெய் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 50 மில்லிலிட்டர்
Preparation Method
அரிசியை உப்பு சேர்த்து, குழையாமல் வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
மாங்காயை துறுவிக் கொள்ளவும்.
சிகப்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு தாளித்து, மாங்காய் துறுவலைப் போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.
அதன்பின் வறுகடலை, முந்திரிப்ப்பருப்பு போட்டு கிளறியபின் சாதம், சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி இறக்கி பரிமாறவும்.