Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4771 Likes :
Ingredients
கோழிக்கறித் துண்டுகள் 500 கிராம்
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 3
இஞ்சி—பூண்டு அரைத்தது 2 மேஜைக்கரண்டி
தனியாத்தூள் 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
ரெட்சில்லிஸாஸ்(Red Chilli Sauce) 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
கோழிக்கறித் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கியபின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் கோழிக்கறித் துண்டுகள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து, மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.
நன்றாக வதக்கியபின் ரெட் சில்லி ஸாஸ் சேர்த்து மேலும் சிவக்க வதக்கி, கொத்தமல்லி இலை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.