Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 3392 Likes :
Ingredients
மீன் துண்டுகள் 500 கிராம்
கடுகுஅரை தேக்கரண்டி
சீரகம்அரை தேக்கரண்டி + 2 தேக்கரண்டி
வெந்தயம்அரை தேக்கரண்டி + அரை தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 3
பூண்டு 8 பல்
கறிவேப்பிலை 5 ஆர்க்கு
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 4
சின்ன வெங்காயம் 20
புளி 1 எலுமிச்சை அளவு
தக்காளி 6
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
தனியாத்தூள் 3 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 8 மேஜைக்கரண்டி
Preparation Method
மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள சீரகம், மீதமுள்ள வெந்தயம், 3 தேக்கரண்டி தனியாத்தூள், மிளகு இவற்றை தூளாக்கிக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, ½ தேக்கரண்டி வெந்தயம், ½ தேக்கரண்டி, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கியபின் புளிக்கரைசல் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்ததூள், தக்காளி அரைத்தது, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் மிதந்து குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகள் போட்டு மீன் வெந்ததும் கொத்தமல்லி இலை மற்றும் தூளாக்கிய பொருட்கள் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.