Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 7314 Likes :
Ingredients
கோழிக்கறித் துண்டுகள் 500 கிராம்
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
பெரியவெங்காயம் 1 + 2
கொத்தமல்லிஇலை 3 மேஜைக்கரண்டி
கசகசா 2 மேஜைக்கரண்டி
தக்காளி 1
முந்திரிப்பருப்பு 10
கிராம்பு 2
பட்டை 2 துண்டு
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
கோழிக்கறித் துண்டுகளுடன் இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், தயிர் இவற்றை கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.
கசகசாவை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த கசகசா, 1 வெங்காயம், கொத்தமல்லி இலை இவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கியபின் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
அதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கியபின் அரைத்து வைத்துள்ள கசகசா கலவையைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் கிளறி விடவும்.
கோழிக்கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி முந்திரிப்பருப்பு போட்டு அலங்கரித்து பரிமாறவும்.