Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 2788 Likes :
Ingredients
மீன் துண்டுகள் 350 கிராம்
இறால் 350 கிராம்
எலுமிச்சைச்சாறு 1 மேஜைக்கரண்டி
தேங்காய்ப்பால் 400 மில்லி லிட்டர்
தாய் ரெட் கறி பேஸ்ட் (Thai Red Curry Paste) 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய லெமன் க்ராஸ் 2 மேஜைக்கரண்டி
பொடியாக நறுக்கிய நார்த்தங்காய் இலை 1 மேஜைக்கரண்டி
ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) 2 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
Preparation Method
மீன் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு கலந்து தனியே வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதித்ததும் இறால் சேர்த்து கிளறவும்.
மூடி வைத்து வேக விடவும்.
திறந்து, அவ்வப்போது கிளறிவிடவும்.
வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாய் ரெட் கறி பேஸ்ட் போட்டு 1 நிமிடம் வதக்கி லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, ஃபிஷ் ஸாஸ் இவற்றை சேர்க்கவும்.
அதன்பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
மிதமான தீயில் கொதிக்க விடவும்.
3 நிமிடங்கள் கொதித்ததும் மீன் துண்டுகள் கலவையை ஊற்றவும்.
இறால் போட்டுக் கிளறவும்.
மீன் துண்டுகளும், இறாலும் வெந்த பிறகு மிளகுத்தூள், கொத்தமல்லி இலை போட்டு இறக்கி சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.