Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 3449 Likes :
Ingredients
பாலக் கீரை 2 கட்டு
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
இஞ்சி 1 அங்குலம்
மிளகுத்தூள் தேவையான அளவு
ஃப்ரெஷ் க்ரீம் 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை 2 சிட்டிகை + 2 சிட்டிகை
பால் 200 மில்லி லிட்டர்
மைதாமாவு 1 மேஜைக்கரண்டி
வெண்ணெய் 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
Preparation Method
பாலக் கீரையை நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
2 சிட்டிகை சர்க்கரையை வெங்காயத்தின் மீது தூவவும்.
அதன்பின் கீரையைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கியபின் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றியபின் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
கீரை மிருதுவாக வெந்ததும் இறக்கி வைத்து, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை எடுத்து விடவும்.
ஆறியதும் கீரையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தபின், வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டியபின் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
மறுபடியும் சூடு செய்து மிளகுத்தூள் சேர்த்து, தனியே வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள 1 தேக்கரண்டி வெண்ணெய் போட்டு சூடானதும் மைதாமாவு போட்டு 2 நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி வைத்து பால் ஊற்றி கட்டி சேராமல் கிளறவும்.
மறுபடியும் சூடேற்றி, மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி, உப்பு மற்றும் மீதமுள்ள சர்க்கரையை போட்டு சற்று கெட்டியானதும் சூப்பில் கலந்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறியபின் பரிமாறவும்.