லெமன் க்ராஸ்—இறால் சூப்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3155
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்—ஐ ஊற்றி, தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • நார்த்தங்காய் இலையை சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி தண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காளானை மிக மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை 8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இறாலின் மேல் கூடுகளை, சிக்கன் ஸ்டாக்குடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்தபின் இறாலின் மேல் கூடுகளை எடுத்து விட்டு லெமன் க்ராஸ், கொத்தமல்லி தண்டு, நார்த்தங்காய் இலை இவற்றைப் போட்டு மறுபடியும் கொதிக்க வைக்கவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்த பிறகு காளான், தக்காளி, இறால் இவற்றைப் போட்டு மேலும் 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதிகமாக இறாலை வேகவிடக் கூடாது. அதன்பின் இறக்கி வைத்து தாய் சில்லி பேஸ்ட், ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA