காளான்—கோதுமை சூப்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4154
Likes :

Preparation Method

வெள்ளை ஸ்டாக் செய்முறை:
  • 1 வெங்காயம், 1 உருளைக்கிழங்கு, வெள்ளை பூசணி, 1 மேஜைக்கரண்டி முட்டைகோஸ் இவற்றை காய்கறிகள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
சூப் செய்முறை
  • வெங்காயம், இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • காளானை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • காளான் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • கோதுமை மாவை தூவி, 1 நிமிடம் வதக்கவும்.
  • வெள்ளை ஸ்டாக் ஊற்றி, இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறவும்.
  • பால், ½ கப் தண்ணீர் ஊற்றவும்.
  • காளான் வெந்ததும் 5 காளானை எடுத்து தனியே வைக்கவும்.
  • அஜ்—னு—மோட்டோ சேர்க்கவும்.
  • சூப்பை இறக்கி ஆற விடவும்.
  • ஆறிய பிறகு இஞ்சி, பச்சை மிளகாயை எடுத்து விட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
  • மீதியுள்ள பால், தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  • உப்பு, சர்க்கரை சேர்த்து மறுபடியும் மிதமான தீயில் சூடேற்றி கிளறி விடவும்.
  • பரிமாறும்போது மிளகுத்தூள், எடுத்து வைத்த காளான் போட்டு சீஸ் துறுவல் சேர்த்து பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA