Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 2862 Likes :
Ingredients
சிறியதாக நறுக்கிய மீன் துண்டுகள் 500 கிராம்
புளித்தண்ணீர் அரை கப்
சின்ன வெங்காயம் 4
நறுக்கிய கொத்தமல்லி தண்டு 2 மேஜைக்கரண்டி
முழு மிளகு 1 தேக்கரண்டி
இஞ்சி துறுவல் அரை கப்
ஃபிஷ் ஸாஸ் 4 மேஜைக்கரண்டி
பனங்கற்கண்டு (Palm Sugar) 4 மேஜைக்கரண்டி
நறுக்கிய வெங்காயத்தாள் 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
Preparation Method
மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகு, கொத்தமல்லி தண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரைத்த பொருட்களைப் போட்டுக் கிளறவும்.
அதன்பின் ஃபிஷ் ஸாஸ், மீன் துண்டுகள், புளித் தண்ணீர், பனங்கற்கண்டு, இஞ்சித் துறுவல், வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
உப்பு, இனிப்பு சுவை சரி பார்த்தபின் சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.