பட்டாணி கச்சோரி

Spread The Taste
Serves
4
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3977
Likes :

Preparation Method

மேல்மாவு செய்முறை:
  • மைதாமாவு, உப்புத்தூள், பேக்கிங் பவுடர் இவற்றை சலித்துக் கொள்ளவும்.
  • சலித்த மாவுடன் நெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பூரணம் செய்முறை:
  • பட்டாணியை வேக வைத்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்தது போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,  ஆம்ச்சூர் பவுடர், சாட் மஸாலாத்தூள், சோம்புத்தூள், பட்டாணி, உப்புத்தூள் போட்டுக் கிளறி, கடலைமாவு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
  • உப்பு சரிபார்த்து, சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
கச்சோரி செய்முறை:
  • பிசைந்து வைத்துள்ள மைதாமாவில் 6 உருண்டைகள் செய்து  கொள்ளவும்.
  • ஒரு உருண்டையை பூரிப்பலகையின் மீது வைத்து 3 அங்குல பருமனுக்கு, வட்டமாகத் தேய்க்கவும்.
  • இதன் நடுவே பட்டாணி பூரணத்தை சிறிதளவு வைத்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு வைக்கவும்.
  • இதை 4 அங்குலம் அளவு கச்சோரியாக செய்து கொள்ளவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் கச்சோரிகள் செய்து பாத்திரத்தில் போட்டு ஈரத்துணியால் மூடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கச்சோரிகளை போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA