கீமா பாவ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3711
Likes :

Preparation Method

  • கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் பட்டை, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றைப் போட்டு தாளிக்கவும்.
  • அதன்பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • இஞ்சி—பூண்டு வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி, வேக வைத்த கொத்துக்கறி போட்டுக் கிளறவும்.
  • மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் பட்டாணி சேர்த்து நன்றாக கலந்து கிளறவும்.
  • கொத்துக்கறி கலவை தண்ணீர் இன்றி வற்றியதும கரம் மஸாலாத்தூள், சீரகத்தூள் போட்டுக் கலந்து, 3 நிமிடங்கள் வைத்திருந்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கி, வைத்துக் கொள்ளவும்.
  • கனமான தோசைக்கல்லில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும், பாவ் பன்னை நீள வசமாக நறுக்கி (இரண்டு துண்டுகளாக வெட்டிவிடக் கூடாது).
  • தோசைக்கல்லில் போட்டு லேஸாக மேலும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து லேஸாக வறுத்து எடுக்கவும்.
  • ஒரு தட்டில் வறுத்த பாவ் பன்னை வைத்து கொத்துக்கறி மஸாலாவை தனியாக வைத்து, நறுக்கிய எலுமிச்சம்பழத் துண்டுகள் வைத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA